கடைக்கு சென்ற பெண் மாயம்

பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார் பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி மலர்விழி வயது 34) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் பார்த்திபன் காரைக்காலில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணியளவில் மலர்விழி கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மலர்விழி இல்லை. இதையடுத்து பார்த்திபன் தனது மனைவி மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com