மாமனாரின் நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

மாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது58). இவர் அரங்கனூரை சேர்ந்த மாணிக்க கவுண்டருடன் குடும்ப நண்பராக பழகி வந்தார்.

இதற்கிடையேமாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் மணிவண்ணனிடம் மாணிக்க கவுண்டர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சொன்னார்.

அதன் அடிப்படையில் மணிவண்ணன் இந்த வழக்கு குறித்து விசாரித்து மாணிக்க கவுண்டரிடம் தெரிவித்தார்.

இதனையறிந்த வாசுகி சம்பவத்தன்று மணிவண்ணன் அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அவரது செல்போனில் ேபசிய வாசுகி நீ யாருடா என் குடும்ப விஷயத்தில் தலையிட, இனி உன்னை விடமாட்டேன், உன்னை ஆள் வைத்து தீர்த்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சல் அடைந்த மணிவண்ணன் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com