டீ கடை உரிமையாளரை ஓட ஓட வெட்டிய வாலிபர்கள்

புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் . இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது53). இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.

மேலும் அந்த பகுதியில் 3 வேளையும் அன்னதானம் வழங்கி வருகிறார். பச்சையப்பன் கடையில் இருந்தார். அந்த நேரத்தில் மது போதையில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு உணவு கேட்டனர்.

பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கத்தியால் பச்சையப்பனை வெட்டினர். அவர் கடையில் இருந்து சாலையில் ஓடினார். வாலிபர்கள் அவரை ஓடஓட விரட்டி வெட்டினர். இதில் அவருக்கு கைகள், தலை பகுதிகளில் வெட்டு விழுந்தது.

பச்சையப்பன் அங்கிருந்த கடை ஒன்றில் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார். இதனால் வாலிபர்கள் கொலை மிரட்டல் விடுத்தப்படி அங்கிருந்து சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் பச்சையப்பனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பெரியக்கடை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com