மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல்

புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை தேங்காய்திட்டு காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா(வயது50). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் அங்குள்ள புத்துக்கோவில் அருகே கோவிந்தசாமி என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(22) என்பவர் அந்த வழியாக சென்றார். திடீரென கார்த்திக் தன்னை ஏன் முறைத்து பார்க்கிறாய்? என ராஜாவிடம் கேட்டார். அதற்கு ராஜா நான் முறைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் இதனை ஏற்காமல் கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனால் ராஜா அலறல் சத்தம் போட்டார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்த கார்த்திக் ராஜாவிடம் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com