காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்

போலீசில் புகார்2007-ம் ஆண்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 39) இவரது தந்தை புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . விக்னேஷ்வரி சரவணன் என்ற வாலிபரை காதலித்து இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரது பெற்றோரும் பேசி 2007-ம் ஆண்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்துக்கு முன்பே சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் சரவணன் மது குடித்து வந்ததால் இதனை விக்னே ஷ்வரி தட்டிக்கேட்கும் போதெல்லாம் அவரை சரவணன் அடித்து துண்புறுத்தி வந்தார். இதற்கிடையே திருமணத்தின் போது விக்னேஷ்வரிக்கு அவரது பெற்றோர் 35 பவுன் வரதட்சனையாக கொடுத்தனர். அந்த நகையில் வியாபாரம் செய்வதாக கூறி சரவணன் 25 பவுன் நகையை வாங்கி வீணாக செலவு செய்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணனின் நடவடிக்கை யில் மாற்றம் தெரிந்ததால் அவரை செல்போனை விக்னேஷ்வரி ஆராய்ந்து பார்த்தார். அப்போது சரவணனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு விக்னேஷ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

இதனை சரவணனிடம் தட்டிக்கேட்ட போது விக்னேஷ்வரியை அவர் அடித்து துண்புறுத்தினார். ஒருமுறை விக்னேஷ்வரியையும், குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதன் பிறகு சமாதானம் அடைந்து விக்னேஷ்வரி குழந்தை களுடன் கணவருடனும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சரவணன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது செல்போனை விக்னேஷ்வரி ஆராய்ந்து பார்த்தார்.

இதனை பார்த்ததும் ஆத்திரமடைந்த சரவணன் செல்போனை பறித்து விக்னேஷ்வரியின் காலில் ஓங்கி அடித்தார்.

மேலும் இது பற்றி உனது தந்தையிடம் சொன்னால் இனிமேலும் அதிகமாக துன்புறுத்துவதோடு உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று சரவணன் மிரட்டல் விடுத்தார். இது குறித்து விக்னேஷ்வரி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com