வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா இதனால் மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தனர்‌.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. இவர் முதல் கணவர் சிவராமன் சிவக்கொழுந்து என்பவரை திருமணம் செய்து கொண்டு 2 மகன்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் கணவர் இறந்து விட்டதால் புதுவை அரியாங்குப்பம் வானவில் நகரை பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த மணிகண்டன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தனர்.

இதனால் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்கு கீர்த்தனா என்கிற 7 வயது மகள் இருந்து வருகிறார். மணிகண்டன் குடித்துவிட்டு புஷ்பாவிடம் தகராறு செய்து கொண்டுள்ளார். இதைப் போன்று நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்பா தனது மகளை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீடை பூட்டிக்கொண்டு மணிகண்டன் சிமெண்ட் சீட் போட்ட வீட்டின் கூரையில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக புஷ்பா கொடுத்த புகார் அரியாங் குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com