புதுச்சேரியில் மின்னல் தாக்கி பெங்களூரு சுற்றுலா பயணி பலி

மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபி‌‌ஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி பலியான அபிஷேக்.
மின்னல் தாக்கி பலியான அபிஷேக்.
Published on

புதுச்சேரி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

இவர் தனது மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினர்-உறவினர்கள் 10 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.

இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி புதுவையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். நேற்று மாலை அவர்கள் தங்களது 2 கார்களில் புதுவை அருகே பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.

கடற்கரையில் அபிஷேக் தனியாக நடைபயிற்சி சென்றார். மற்றவர்கள் கடல் அலையில் காலை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com