திருக்கனூரில் லாரி மோதி டிரைவர் பலி

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கனூரில் லாரி மோதி டிரைவர் பலி
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் தி.புதுக்குப்பம் பள்ளிக்கூட குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது52). பொக்லைன் டிரைவர்.

சக்திவேலுக்கு உஜ்வாலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவரது உறவினர் இல்ல திருமணம் இன்று காலை திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் சிவன் கோவிலில் நடைபெற்றது.

திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சக்திவேல் திருமணம் முடிந்த பிறகு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கனூர் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது லாரியை முந்தி செல்ல முயன்ற போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சித்தலம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் அவரது வாகனத்தில் இடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறிய சக்திவேல் லாரியின் மீது தவறி விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் சக்திவேல் மீது ஏறியதால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.

திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com