புதுவையில் சுருக்குமடி வலை பயன்பாடு- கடலுக்குள் சென்று போலீசார் சோதனை

சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா என்றும் சோதனையிட்டனர்.போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
புதுவையில் சுருக்குமடி வலை பயன்பாடு- கடலுக்குள் சென்று போலீசார் சோதனை
Published on

புதுச்சேரி:

சுருக்கு மடிவலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 12 நாட்டிகல் மைல் தாண்டியே வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா? என கடலோர காவல் நிலைய போலீசார் இன்று சோதனை செய்தனர்.

புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் வரை 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை போலீசார் சென்று சோதனையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட நாட்களை தாண்டி சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தினார்கள்.

சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்றும் சோதனையிட்டனர்.

இந்த சோதனை அடிக்கடி மேற்கொள்ளப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com