காதலிக்கும்படி வாலிபர் தொந்தரவு செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை

மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
காதலிக்கும்படி வாலிபர் தொந்தரவு செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்த மினி டிப்பர் லாரி டிரைவருக்கு 18 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருந்து வந்தனர்.

மகன் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.

மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் தொடர்ந்து மாணவிக்கு போன் செய்து காதலிப்பதாக டார்ச்சர் செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்துகொண்டு மாணவி வீட்டில் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து காதலிக்கும்படி அந்த வாலிபர் மாணவியிடம் தொந்தரவு செய்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் கூறினார்.

அப்போது மாணவியின் அண்ணன், சேலத்தை சேர்ந்த மணிக்கு போன் செய்து தட்டிக் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி உங்கள் ஊரில் வந்தே உன்னை வெட்டுவேன். என்னை ஒன்னும் செய்யமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவிக்கும்படி கேட்டுள்ளனர். தன் மீது சந்தேகப்படுவதாக கருதிய மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போனில் பேசிய சேலத்தை சேர்ந்த மணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் செல்போன் விபரங்கள் மூலம் அந்த வாலிபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com