புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது. இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.
புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.

வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலமானது பாப்பம்மாள் கோவில் மயானத்தை அடைந்ததும் சிறுமியின் குடும்ப முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிறுமி பயன்படுத்திய புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com