வருகிற 6-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகை

புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வருகிற 6-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகை
Published on

புதுச்சேரி:

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகிற 6-ந்தேதி வருகை தருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை மாதம் புதுச்சேரி வருவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதி வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் இருநாள் பயணமாக வருகிற 6, 7-ந் தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

அவர் புதுச்சேரியில் அரசு சார்பில் சமையல் கியாஸ் மானியம் ரூ.300 வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜனாதிபதி இந்த மாதம் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு கடைசியில் அவர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com