திருமணம் செய்வதாக கடத்தி பிளஸ்-2 மாணவி பலாத்காரம்- டிரைவர் கைது

பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
திருமணம் செய்வதாக கடத்தி பிளஸ்-2 மாணவி பலாத்காரம்- டிரைவர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.

அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com