பிளஸ்-1 மாணவிக்கு கட்டாய திருமணம்: தாய்-மணமகன் உள்பட 6 பேர் மீது வழக்கு

மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பிளஸ்-1 மாணவிக்கு கட்டாய திருமணம்: தாய்-மணமகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
Published on

புதுச்சேரி:

புதுவை அருகே பாகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதுபற்றி மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு அவரது தாய், சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் சேர்ந்து கடப்பேரிகுப்பத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய் லட்சுமி, மணமகன் பூபதி மற்றும் சிறுமியின் சித்தப்பா மற்றும் சித்தி உள்பட 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com