முதல் முறையாக புதுவை-சென்னைக்கு மின்சார பஸ்

பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.
முதல் முறையாக புதுவை-சென்னைக்கு மின்சார பஸ்
Published on

புதுச்சேரி:

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

புதுச்சேரி பஸ் நிலையம் மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.

ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com