புதுச்சேரி அருகே கடலில் குளித்த பெண்களை புகைப்படம் எடுத்த டிரைவர் கைது

மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி அருகே கடலில் குளித்த பெண்களை புகைப்படம் எடுத்த டிரைவர் கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் கடற்கரையும் ஒன்றாகும். இங்குள்ள மணல் பரப்பை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சம்பவத்தன்று இந்த பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.

அப்போது மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையிலும் ஈடுபட்டார்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு சுற்றுலா பயணிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பதும், டிரைவரான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேனில் சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com