கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: காதலி பேச மறுத்ததால் துயர முடிவு

மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி, கொசப்பாளையம் திருமால் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரங்கசாமி (வயது53). பைனான்சியர். இவரது சொந்த ஊர் திருப்பூர் ஆகும்.

இவரது மகன் மிதுன்குமார் (17). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரங்கசாமியின் தாயார், திருப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பார்க்க ரங்கசாமி தனது மனைவியுடன் திருப்பூர் சென்றார்.

மிதுன்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.

அவர்கள் வந்து பார்த்த போது உள்ளே மின்விசிறியில் மிதுன்குமார் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மிதுன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மிதுன்குமார் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை காதலித்து வந்ததும் சில நாட்களாக அந்த மாணவி மிதுன்குமாரிடம் பேசாமல் இருந்ததும் இதனால் மனஉளைச்சல் அடைந்த மிதுன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com