வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை காலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண் ஏல சீட்டு சேர்ந்துள்ளார். இதற்கிடையே முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஏல சீட்டு தொகையை பெற்றுள்ளார். ஆனால் அதன் பின் ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

சுமார் ரூ.14 லட்சம் வரை அவர் கட்ட வேண்டி இருந்தது. இதனை ஏல சீட்டு நடத்தும் பெண் பல முறை கேட்டும் அந்த பணத்தை அவர் கொடுக்க வில்லை.

இதனால் அந்த பெண்ணை ஏல சீட்டு நடத்தி வரும் பெண் திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீட்டு பணம் எடுத்த அந்த பெண் இது குறித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் பணி புரிந்து வரும் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஐ.டி.கம்பெனி ஊழியர் வாட்ஸ்-அப் கால் மூலம் ஏல சீட்டு நடத்தி வரும் பெண்ணை தொடர்பு கொண்டு அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து அந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கோயம்புத்தூர் ஐ.டி கம்பெனி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com