டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்புவிழா

புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பேட்ரிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்புவிழா நடந்த போது எடுத்த படம்.
பேட்ரிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்புவிழா நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில டேபிள் டென்னிஸ் கழகத் தலைவர் நமச்சி வாயம் கலந்து கொண்டார்.

துணைத் தலைவர் சுந்தர வரதன், மாநில டேபிள் டென்னிஸ் கழக பிரதிநிதிகள் குணசேகரன், அந்தோணி பிரிட்டோ, ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சுழற் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் பிரடரிக் வரவேற்று பேசினார். பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜித்தா பிரடரிக், பள்ளியின் முதல்வர் அல்போன்ஸ் கில்டா, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை பள்ளியின் மாணவன் விஷ்ணு, மாணவி அனன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவன் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com