மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி

புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நெட்டப்பாக்கம் கம்பன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஸ்கரன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கிய காட்சி.
நெட்டப்பாக்கம் கம்பன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஸ்கரன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.

தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சப்-இன்ஸ்பெக்டர் வாழ் முனி, செயலாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யுவராஜா மற்றும் அசோசியேஷன் குழுவினர் செய்திருந்தனர். பளு தூக்கும் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட உடற்பயிற்சி கழகத்திலிருந்து 120 ஆண்கள் 66பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com