

புதுச்சேரி:
புதுவை செஸ் அசோசியேஷன் மற்றும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் 12 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு அமலோற் பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரிட்டோ வரவேற்று பேசினார்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இப்போட்டி நடைபெற உறுதுணையாக இருந்து இட வசதி ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளி தாளாளர் லூர்துசாமியை பாராட்டினர். அதோடு இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.