தென் மண்டல அளவிலான கால்பந்து போட்டி

கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
 எழுவர் கால்பந்தாட்ட போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம்   தொடங்கி வைத்தார்.
 எழுவர் கால்பந்தாட்ட போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் முதன்முறையாக தென் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆன எழுவர் கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.

இந்த எழுவர் கால்பந்தாட்ட போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் முன்னிலை வகித்தார்.

இந்த போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக தாகூர் கலைக் கல்லூரி வளாகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுவை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானையின் நினைவாக மரக்கன்று நட்டார். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை தாகூர் கலைக் கல்லூரி உடற்கல்வி துறை மேற்கொண்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com