திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.
திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சிங்க்ரோ சர்வ் குளோபல் சொல்யூஷன் திட்ட பயிற்சி மையத்தில் புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் எம்பலம் செல்வம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊரக மேம்பாட்டு முகமை அரசு செயலர் நெடுஞ்செழியன், முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அடப்பா ராஜா சுரேஷ்குமார், வேளாண் அறிவியல் நிறுவனத் தலைவர் அக்ரி கணேஷ் ,கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com