2-வது நாளாக கடைகள் அடைப்பு

நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது.
கரியமாணிக்கம் சந்திப்பில் திரண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்திய காட்சி.
கரியமாணிக்கம் சந்திப்பில் திரண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் இன்றும் 2-வது நாளாக அடைக்கப்பட்டுள்ளது.கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கடையை திறக்காமல் உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு பதட்டமும் உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அனைத்து சந்திப்புகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com