டிரோன் மூலம் விதை, உரம், பூச்சி மருந்து தெளிப்பு

விவசாயிகளுக்கு பயிற்சி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
விவசாயிகளுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
விவசாயிகளுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை வேளாண் துறையின் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மைய்யம், ஆத்மா,காமராஜர் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து 'விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு செயல்விளக்கம்' குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

வில்லியனூர் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.

டிரோன் உரிமையாளர் கார்த்திகேயன், ட்ரோன் மூலம் விதை விதைப்பது, நானோ யூரியா உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பதை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் புதுவை பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் வில்லியனூர், தமிழ்ச் செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com