கழிவறையில் தவறி விழுந்து காவலாளி பலி

அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கலைச்செல்வி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.

காமராஜுக்கு இதய நோய் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

உடல் சரியானதால் மீண்டும் காவலாளி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார். உடனடியாக அவரது மனைவி கலைச்செல்வி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர் பிற்பகல் 12 மணி அளவில் மீண்டும் கழிவறைக்கு கலைச்செல்வி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கழிவறையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற காமராஜ் கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதில் காயமடைந்த காமராஜை, கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதயநோயின் காரணமாகவாக அல்லது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com