அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா-அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.
பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் நமச்சிவாயம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.
பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் நமச்சிவாயம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கண்காட்சியில் சிறந்த முறையில் விளக்கம் அளித்த மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com