பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் சாமிநாதன் கொடியேற்றினார்

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் சாமிநாதன்  கொடியேற்றிய காட்சி.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் சாமிநாதன் கொடியேற்றிய காட்சி.
Published on

புதுச்சேரி:

பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு ஸ்தாபன தின விழா பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை மாநில தலைவர் சாமிநாதன் பா.ஜனதா நிர்வாகிகளுடன் கேட்டார்.

நிகழ்ச்சியில், அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வல்லுனர் பிரிவு மாநில அமைப்பாளர் ஆசிர்வாத ரமேஷ், இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர், மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, ஓ.பி.சி. அணி செயலாளர் சீனிவாச பெருமாள், லாஸ்பேட் தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, மாவட்ட துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் ஸ்தாபன தினத்தை மாநிலம் முழுவதும் அவரவர் தொகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com