காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி குடும்பத்தோடு சாமி தரிசனம்

கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.
மத்திய மந்திரி தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அருகில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளனர்.
மத்திய மந்திரி தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அருகில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளனர்.
Published on

புதுச்சேரி:

காரைக்கால் மாவட் டத்தில், நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாக்க ளில் கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை குடும்பத்தோடு சாமி தரி சனம் செய்தார்.

முன்னதாக மத்திய மந்திரிக்கு கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார். தொடர்ந்து விநாயகர், முருகர் சண்டி கேஸ்வரர், உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து விட்டு, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுச்சேரி மாநில அமைச்சர் கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com