

புதுவை மருந்து கட்டுப்பாட்டுதுறை அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திரிபுரா, ஆந்திரா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் பெறப்பட்ட கடிதம் அடிப்படையில் மும்பை நிறுவனம் தயாரிக்கும் மோக்ஸ்கிளேவ் 625, சிக்கிம் நிறுவனம் தயாரிக்கும் கிளேவம் 625, பெங்களூரு நிறுவனம் தயாரிக்கும் 625 டியோ என்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகள், அரியானா, யமுனாநகர், மனக்பூரில் உள்ள நிறுவனம் தயாரிக்கும் டெல்மினஸ் என்ற உயர்ரத்த அழுத்த மாத்திரை ஆகியவை தரம் இல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை புதுவையில் விற்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் இந்த மாத்திரைகளை உடனடியாக உற்பத்தியாளர், விநியோகஸ்தர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.