ரூ.2. 1/2 கோடியில் மீன்மார்க்கெட் கட்ட ஆய்வு

இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மீன்மார்க்கெட் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

உப்பளம் அம்பேத்கர் சிலை அருகே மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு துறைமுகம் செல்லும் பாதையில் வியாபாரம் செய்ய நகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்களை சாலை களில் தாறுமாறாக நிறுத்தி மீன் வாங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2 ½ கோடியில் தேங்காய்திட்டு செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு ஆய்வு நடந்தது. விரைவில் மீன்மார்க்கெட் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com