சாலை சீரமைப்பு பணி

அங்காளன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்த காட்சி.
அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

திருபுவனை செல்லிப்பட்டு சாலை, விநாயகம்பட்டு, சோரப்பட்டு இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்து டனே அவ்வழியாக பொதுமக்கள் வாகனத்தில் சென்று வந்தனர் இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் மூலம் ரூ. ஒரு கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செல்லிப்பட்டு, விநாயகபட்டு , சோரப்பட்டு இணைப்பு சாலையை மறு சீர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com