மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை மின்துறை மின் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சிறுகுறு, குடிசைத்தொழில் முனைவோர், வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 4 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் மீள முடியாத சூழலில் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது கண்டிக்கதக்கது. 

எனவே விலைவாசி உயர்வால் வறுமையில் வாழும் மக்கள் மீது உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை முதல் அமைச்சர் ரங்கசாமி- ப.ஜனதா அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com