பாகூர் போலீஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் சீரமைக்கும் பணி

பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது.சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
பூமி பூஜை செய்து பணியை செந்தில் குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
பூமி பூஜை செய்து பணியை செந்தில் குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனைத் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று ரூ.30 லட்சத்து 77ஆயிரம் செலவில் சீரமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலமைதாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் நந்த குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com