பிரதமர் மோடிக்கு ரங்கசாமி வாழ்த்து

நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது:-

நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

இந்தியாவை கட்டமைப்பதில் உலகளவில் சிறந்த தலைவராக திகழ்வதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மாநில மக்கள் சார்பிலும், எனது சார்பிலும், நல் ஆரோக்கியத்தோடு, நல் உடல்நலத்தோடு நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இறைவன் அருள்புரியட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com