புதுவை மாநில ஒருங்கிணைந்த அ.தி.மு.க. செயலாளராக அன்பழகன் நியமனம்

புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.

தற்போது நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு புதுவை மாநில அ.தி.மு.க என ஒருங்கிணைப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவி த்துள்ளார். ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

மாநில செயலாளராக அன்பழகன், அவைத்தலை வராக அன்பானந்தம், இணை செயலாளர்களாக பேராசிரியர் ராமதாஸ், வீரம்மாள், மகாதேவி, துணை செயலாளர்களாக உமா, முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், குணசேகரன், பொருளாளராக ரவி பாண்டுரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படவில்லை. காரைக்கால் தொடர்ந்து தனி மாவட்டமாக செயல்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com