மத்திய உள்துறை செயலாளரிடம் புதுவை சபாநாயகர் கோரிக்கை மனு

காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மத்திய அதிகாரிகளிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மனு அளித்த காட்சி. 
மத்திய அதிகாரிகளிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மனு அளித்த காட்சி. 
Published on

புதுச்சேரி:

காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இணை செயலாளர் (யூனியன் பிரதேசம்) அசுடோஷ் அக்னிஹோத்ரி ஆகியோர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், புதுவை மாநிலத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன், கொள்ளப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com