புதுவை ரெயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

வழக்கமாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இந்த ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அட்டவணையின்படி புறப்பட்டுச் செல்லும்.
புதுவை ரெயில்கள் 3 நாட்களுக்கு ரத்து
Published on

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுவைக்கு வரும் ரெயிலும், புதுவையிலிருந்து புறப்படும் ரெயிலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுவை மெமு விரைவு ரெயில் வரும் 13, 17, 20 தேதிகளில் விழுப்புரம் ரெயில் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் இந்த தேதிகளில் திருப்பதி- விழுப்புரம் ரெயில் சந்திப்பு நிலையங்களுக்கு இடையில் மட்டும் இயக்கப்படும்.

அதே போன்று இந்தத் தேதிகளில் புதுவை ரெயில் நிலையத்தில் மாலை 3.35 மணிக்குப் புறப்படும் புதுவை- சென்னை எழும்பூர் மெழு ரெயில் புதுவை- விழுப்புரம் சந்திப்பு ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

வழக்கமாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இந்த ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அட்டவணையின்படி புறப்பட்டுச் செல்லும். இந்த தகவலை தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com