பைக்கில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில், சாராயம் பறிமுதல்

தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.
பைக்கில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில், சாராயம் பறிமுதல்
Published on

வானூர்:

புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com