டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் : முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பாரா?

இந்த முறையும் கூட்டத்தை புறக்கணிப்பாரா அல்லது பங்கேற்பாரா என்பதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இதுவரை உறுதி செய்யவில்லை.
ரங்கசாமி
Published on

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தமிழக முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. இந்த முறையும் கூட்டத்தை புறக்கணிப்பாரா அல்லது பங்கேற்பாரா என்பதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இதுவரை உறுதி செய்யவில்லை.

மேலும், நிதி உள்பட அனைத்து இலாகாக்களும் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சூழலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்க விமான டிக்கெட் ஏதும் பதிவு செய்யவில்லை. ஆனால், கூட்டத்தில் முதல்-அமைச்சர்கள் பங்கேற்க மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதால், ஒருவேளை இரவு திடீர் முடிவு எடுத்து புறப்பட்டு செல்லலாம் என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com