கடற்கரை சாலையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது.மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்
புதுவை கடற்கரை இன்று மீண்டும் நிறம் மாறி காணப்பட்ட காட்சி.
புதுவை கடற்கரை இன்று மீண்டும் நிறம் மாறி காணப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி;

புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலைக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர்.

இந்த நிலையில் இன்று புதுவையில் மழை நின்று, வெயில் அடிக்க தொடங்கியது. கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து கடற்கரை சாலைக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அனுமதித்தனர்.

இதனால் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரையில் நடந்து சென்று கடல் அழகை ரசித்தனர். அதேநேரத்தில் கடலில் வாழைகுளம் முதல் தலைமை செயலகம் வரையில் ஒரு பகுதி செந்நிறமாக காட்சி அளித்தது. ஏற்கனவே 4 முறை கடலின் நிறம் மாறியுள்ளது. இன்று 5-வது முறையாக கடல் நிறம் மாறி காட்சி அளித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com