பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கராத்தே சுந்தர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி ஆகியோர் கோப்பைகளை வழங்கிய காட்சி.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கராத்தே சுந்தர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி ஆகியோர் கோப்பைகளை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோஜுரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார், பொது சேவை இயக்க மீனாட்சி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஏம்பலம் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட அணி, 2-ம் பரிசு பெற்ற புதுவை ரெயின்போ அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினார்கள். 3-ம் பரிசு பெற்ற ஏம்பலம் சன் பூப்பந்தாட்ட அணி 4-ம் பரிசு பெற்ற பூமியான் பேட்டை டாக்டர் அம்பேத்கார் பூப்பந்தாட்ட அணிக்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

முடிவில் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட கழக செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com