ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்களை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர்

சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
சேதராப்பட்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.
சேதராப்பட்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.
Published on

புதுச்சேரி:

சேதராப்பட்டு புது காலனி பகுதியை சேர்ந்த வர்கள் சுந்தர் (வயது 25). அரவிந்தன் (27). இருவரும் இரவு சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.

அப்போது கரசூர் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லிங்கேஸ்வரன் (32) அதே கடைக்கு ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட நிலையில் லிங்கேஸ்வரன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரையும், அரவிந்தனையும் ஓட, ஓட விரட்டி குத்தினார்.

மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில் சுந்தருக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட பழைய காலனி பகுதிக்குள் ஓடினார். அரவிந்தனும் படுகாயம் அடைந்தார்.பின்னர் லிங்கேஸ்வரன் தப்பி ஓடி விட்டார்.

ரத்தம் சொட்ட சொட்ட ஊருக்குள் ஓடிய வாலிபர்களை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ நடந்த கடை வாசலில் இருந்து இடத்தில் இருந்து 20 அடி தூரத்திற்கு ரத்தக்கறைகள் படர்ந்து கிடந்ததால் இன்று காலை அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கொலை வெறி தாக்குதல் நடத்திய லிங்கேஸ்வரனை போலீசார் தேடிவரும் நிலையில், காலை சேதரப்பட்டு மற்றும் கரசூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com