தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி 7 பேர் படுகாயம்

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர்
 பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்த காட்சி.
 பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தனியார் பஸ் சுமார் 40 பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடலூர் வழியாக புதுவை நோக்கி நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முள்ளோடை நுழைவாயில் அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமார் 7 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின்னர், பஸ் முன்பக்கம் கண்ணாடி மற்றும் எஞ்சின் சேதம் அடைந்து விட்டது.

தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து மாற்று பஸ்ஸில் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் இயந்திரத்தை வரவ ழைத்து அந்த பஸ்சை சுமார் 2 மணி நேரமாக போராடி எடுத்தனர். இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com