பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

அரியாங்குப்பம் ெதாகுதி பா.ஜனதா சார்பில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர்செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற காட்சி.
பிரதமர் மோடியின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர்செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடியின் 107-வது மனதின் குரல் நிகழ்ச்சி அரியாங்குப்பம் தொகுதியில் நேரலை நிகழ்ச்சியாக நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார், இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த தொழிலாளி லோகநாதன் துப்புரவு பணி செய்து ஏழைகளுக்கு உதவி வருவதை பிரதமர் மோடி பாராட்டியது அனைவரையும் வியக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், விவசாய அணித் தலைவர் புகழேந்தி, பட்டியல் அணித் தலைவர் தமிழ்மாறன், விவசாயஅணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், தொகுதி பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து மற்றும் முருகவேல், மனோ, கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com