அர்ச்சகரின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் சுந்தர மூர்த்தி விநாயக புரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை சங்கர் வயது 48 இவர் அங்குள்ள பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அசோக்கும் அவரது மனைவியும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய போது படுக்கை அறையில் மின் விசிறியில் சங்கர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து சங்கரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com