பெரிய திரையில் சென்னை-கொல்கத்தா போட்டி ஒளிபரப்பு: புதுவை கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.
பெரிய திரையில் சென்னை-கொல்கத்தா போட்டி ஒளிபரப்பு: புதுவை கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

புதுச்சேரி:

ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com