பெட்ரோல் பங்க் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை

பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபி (வயது 51) இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.

இவரது 2-வது மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் புதுவை பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி இருந்தார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் கோபி தங்கி இருந்த அறை திறக்கப்பட வில்லை.இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் கோபி தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகள் இறந்த வேதனையில் கோபி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com