ஓய்வூதியர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஓய்வூதியர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
ஓய்வூதியர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை இ.பி.எப். பென்ஷனர்கள் நலச் சங்கம் சார்பில் முதலியார்பேட்டை தபால்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமலிங்கம், வேலாயுதம், செல்வராஜ், அவணியப்பன், நடராஜன், பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இ.பி.எப். பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

பென்சனர்களின் கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com