மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு பெற்றோர் சங்கம் பாராட்டு

மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியை மத்திய சுகாதாரத்துறை செயலர் பார்வையிட்ட காட்சி.
புதுவை அரசு ஆஸ்பத்திரியை மத்திய சுகாதாரத்துறை செயலர் பார்வையிட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவைக்கு வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை செயலர் சுதான்ஷ் பந்த் முதல்-அமைச்சர் ரங்க சாமியை சந்தித்து பேசிய தோடு 2023-24-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு காலதாமதமாக சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களின் சேர்க்கையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 830 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையையும் உறுதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசு சுகாதாரத்துறை செயலருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com